
Giant Leap Forward by Anurendra Jegadeva
மலேசியாவின் எதிர்காலத்தை மறுகற்பனை செய்ய வாரீர்
நாங்கள் மலேசியாவின் எதிர்காலத்தை விரிவான தொலைநோக்குப் பார்வையாய் கிரகிக்க தகுந்தக் களத்தை உருவாக்கி வழிகாட்ட விரும்புகிறோம். இந்த முயற்சியில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் இதர இலக்கியங்கள், தத்துவம், திரை உலகம் மேலும் இசை ஆகிய பல்வேறு கலைகள் உள்ளடங்கும்.
மலேசியாவின் எதிர்காலத்திற்கான சிறந்த மாற்றுகளை மறு-கற்பனை செய்வதன் மூலம், நமது வழக்கமான அனுமானங்களிலிருந்து நாம் விடுபடுகிறோம்.
மலேசியாவின் எதிர்காலத்திற்கான நம்பதகு சாத்தியக்கூறுகளைத் தழுவி அதனை முன்னோக்கி செல்லும் வழிகளை நாம் கற்பனை செய்யலாம்.
படைப்பாற்றல், நமது பண்புகளை ஆராய உதவுவதோடு கற்பனை, பாதிக்கவும் செய்யலாம். மேலும் அது நாம் தொடர்பு கொள்ளும் முறையை மாற்றுவதிலும், தகவலை உள்வாங்குவதல் மற்றும் அது சார்ந்த நடவடிக்கை எடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. படைப்பாற்றல், கலைகள் மற்றும் செயல்பாடுகள் சமூக மாற்றங்களை தீவிரமாக ஊக்குவித்து சமூகப் பிரச்சினைகளில் ஆழமான ஈடுபாட்டை உருவாக்குகின்றன, இது சமூகத்தை நன்முறை படுத்தி, புத்துணர்ச்சியுற்ற உள்ளூர் சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களை உருவாக்கும்.
படைப்பாற்றல், நமது பண்புகள் ஆராய உதவுவதோடு கற்பனை, புத்தாக்கம் மற்றும் நமது சமூகத்திற்கான முன்னேற்றத்தைதும் தூண்டுகிறது. இருப்பினும், பெரும்பாலும், படைப்பாற்றல் மற்றும் கலைக்கு, நிலையான சமூகங்களை உருவாக்கும் ஆற்றல் உண்டு என்பது பெரிதும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகப் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் அதிக கவனம் செலுத்தும் உலகில் நாம் வாழ்கிறோம். இதில், கலை மற்றும் படைப்பாற்றல் திறன்களைப் பயன்படுத்தி படைப்புகளை உருவாக்க, பொதுமக்களின் விழிப்புணர்வை உயர்த்த, மனிதநேயத்துடன் வாழ்வது என்றால் என்ன என்று கேள்விக்கேற்ற விடையை தேடி மனிதர்களை பயணிக்கச் செய்ய மலேசியர்களுக்கு ஒரு களம் இல்லை.
புராஜெக்ட் ஃபியூச்சர் மலேசியா இலக்கிய உலகின் ‘யூக கற்பனை கதை’ வகையிலிருந்து உத்வேகம் பெறுகிறது மற்றும் ‘அஃப்ரோஃபியூச்சரிசம் (Afrofuturism)’ வரையறை படி- “கருப்பு இன வரலாரு மற்றும் கலாச்சாரத்தின் கூறுகளை ஆராய அறிவியல் புனைகதை, வரலாறு மற்றும் கற்பனையை இணைக்கும் பண்பாடின் சிறப்பு ஆகும்” இந்த திட்டம் தேசத்திற்கான சாத்தியமான எதிர்காலங்களை மறுபரிசீலனை செய்வதின் வழி மலேசியர்களின் மனப்போக்கு மற்றும் கவலைகளை ஆராய்கிறது.
“நாளை பற்றிய சித்தரிப்புகள் இன்றைய உலகில் சக்திவாய்ந்த, உறுதியான விளைவுகளை ஏற்படுத்தும்.”
ஆயினும் பூமியின் தொலைதூர எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது நம் வழக்கமான வாழ்க்கையிலிருந்து சிறு இடைவெளி எடுத்துக்கொள்ள உதவுகிறது – நம் மனதை வெவ்வேறு இடங்களுக்கும் நேரங்களுக்கும் கொண்டு செல்வதன் மூலம் நம் கற்பனை திறன் வளமாகிறது. நமது வழக்கமான சிந்தனை முறைகளிலிருந்து இடைவெளி எடுப்பது, உலகை புதுமையாக அனுபவிப்பதற்கும் சிந்தனைச் சிறையில் இருந்து மீளவும் உதவும் என்பது, கார்ப்பரேட் பயிற்சியாளர்கள் பரிந்துரை. அறிவாற்றல் துறை சார்ந்த விஞ்ஞானிகள் “ஒருவர் இதுவரை பார்த்திராத ஒன்றை (ஆனால் அது இருந்திருக்கலாம்)” உணர்ந்து, படைப்பாற்றலை எவ்வாறு தூண்ட முடியும் என்பதைக் காட்டியுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களை, தொலைநோக்கு சிந்தனையளர்களுடன் ஒதுக்கி, உலகின், பலவகை காலங்களை உட்படுத்திய எதிர்காலத்தை கிரகிப்பது, தெளிவான சிந்தைக்கு வித்திடுகிறது. இது பல தசாப்தங்கள், நூற்றாண்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலப்பரப்புகள், மக்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கான தொலைநோக்கு பச்சாத்தாபத்தை வளர்க்க முடியும். உலகளாவிய சுற்றுச்சூழல் நெருக்கடி ஏற்படுவதால், கிரக பச்சாத்தாபத்தைத் தழுவுவது நமது கூட்டு உயிர்வாழ்வுக்கு இன்றியமையாததாக இருக்கும்.
மூலம், Ialenti, V., 2021, The Art of Pondering Earth’s Distant Future, Scientific American / பூமியின் தொலைதூர எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் கலை, அறிவியல் அமெரிக்கன்
கோவிட் -19 தொற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, தேசத்தின் ஆன்மாவை புதுப்பிக்க புதிய கற்பனை யோசனைகள் மற்றும் ஆக்கபூர்வமான தீர்வுகள் தேவை.
‘புராஜெக்ட் ஃபியூச்சர் மலேசியா’ உலகெங்கும் வாழும் மலேசியர்களை அழைக்கிறது.
நேர்மறை மற்றும் முன்னோக்கு சிந்தனையே இத்திட்டத்தின் முதன்மை நோக்கு; நமது பன்முக கலாச்சாரம், பன்முகத்தன்மை கொண்ட சமூகம் வழி நாட்டின் தனித்துவத்தை கொண்டாவோம்.
எதிர்கால அல்லது மாற்று மலேசியா குறித்த ஆக்கப்பூர்வ உதாரணங்கள்:
- அடுத்த 100 ஆண்டுகளில் வளங்குன்றா மலேசியா எப்படி இருக்கும்?
- எதிர்காலத்தில் மலேசியாவின் உணவு தேவை எதை அல்லது யாரை சார்ந்து இருக்கும்?
- நாம் இன்னும் பிரிட்டிஷ் அரசால் ஆளப்பட்டிருந்தால் மலேசியா எப்படி இருக்கும்?
- ஒருவேளை தேசம் சுதந்திரம் பெறவில்லை என்றால் என்ன செய்வது? நாம் யாராலும் படையெடுக்கப்படாமல் இருந்திருந்தால் மலேசியா எப்படி இருக்கும்?
- மே 13 சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் மலேசியா எப்படி இருந்திருக்கும்?
- காடுகளை அழிக்கும் நடவடிக்கை நடக்கவில்லை என்றால் மலேசியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
- எதிர்காலத்தில் மலேசியர்களின் தொழில்நுட்ப்ப பயன்பாடு எப்படி இருக்கும்? சமூகத்தின் மீதான தாக்கங்கள் என்ன?
இந்த திட்டத்தில் இரண்டு பிரிவிகள் உள்ளன

முதல் பிரிவு உலகில் எங்கிருந்தும் பத்து மலேசிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளை ஈடுபடுத்தி, ஊக்கமளிக்கும் உரையாடல்களைத் தொடங்கும், பரவலாகப் பகிரக்கூடிய எந்தவொரு கலை வடிவத்திலும் புதிய படைப்புகளை உருவாக்க ஆர்வத்தின் வெளிப்பாடாகும்.
பதினைந்து விண்ணப்பதாரர்களுக்கு RM850 சண்மானமாக வழங்கப்படும். மேலும் அவர்களது படைப்புகள் ‘புராஜெக்ட் ஃபியூச்சர் மலேசியா’ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் இடம்பெறும்.
இந்த படைப்புகள் மூன்று கருப்பொருள்களுக்கு பதிலளிக்க வேண்டும்:
- மனித உரிமை, ஜனநாயகம் மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி, பாலியல் வன்முறையைத் தடுப்பது, தற்கால அடிமைமுறையை குறைத்தல், ஊடக சுதந்திரம் மற்றும் பெண் கல்வி உரிமையை ஊக்குவித்தல்.
- பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை, வனவிலங்குகள் எதிர் நோக்கும் அச்சுறுத்தல்கள் உட்பட.
- பன்னாட்டு தொடர்புகள் மற்றும் அரசியல், நாடு மற்றும் மக்களிடையே சுமுக உறவுகளை மேம்படுத்துதல்.
முக்கிய தேதிகள்
- ஆவண சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு: 20 அக்டோபர் 2021
- ஏற்றுகொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நவம்பர் 2021 க்குள் அறிவிக்கப்படும்
- திட்டவரைவு 20 டிசம்பர் 2021 க்குள் நிறைவு செய்ய பட வேண்டும்.

இரண்டாவது பிரிவு, உலகெங்கும் உள்ள மலேசியர்கள்
பங்கெடுக்கலாம். இதில் 250 வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவாக, மலேசிய சாத்தியமான எதிர்காலங்களை மறு-கற்பனை செய்து அந்த யோசனைக்கேற்ற ஆக்கபூர்வமான
தீர்வுகளை சமர்ப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முதல் 10 சமர்ப்பிப்புகளுக்கு, ரிங்கிட் மலேசியா 150 கிரப் பரிசு அட்டை வழங்கப்படும், மேலும் அவர்களது படைப்புகள் ‘புராஜெக்ட் ஃபியூச்சர் மலேசியா’ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் இடம்பெறும்.
முக்கிய தேதிகள்
- ஆவணங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு: 30 டிசம்பர் 2021
- வெற்றிகரமான விண்ணப்பதாரர்களுக்கு 5 ஜனவரி 2022 க்குள் அறிவிக்கப்படும்.
சமர்ப்பிக்கும் ஆவணங்கள் ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் இருக்க வேண்டும், இருப்பினும் நீங்கள் சீன, தமிழ் அல்லது பிற மலேசிய மொழிகளில் சமர்ப்பிக்க விரும்பினால், தயவுசெய்து info@projectfuturemalaysia.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

இந்த திட்டத்தை மேலும் வளர்க்கவும் & இதன் கலந்துரையாடலை மேம்படுத்தவும் உதவுங்கள்
மலேசியாவின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு விரிவான பார்வைக்கு வழிகாட்டுவதற்கான நிலைமைகளை உருவாக்க “புராஜெக்ட் ஃபியூச்சர் மலேசியா” விரும்புகிறது. இந்த முன்னோக்கு சிந்தனை அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், தத்துவம், திரை உலகம் மற்றும் இசை ஆகிய பல்வேறு கலைகளின் ஆழமான ஈடுபாட்டை உள்ளடக்கியதாகும். மலேசியாவின் எதிர்காலத்திற்கான சிறந்த மாற்றுகளை மீண்டும் கற்பனை செய்து வெளிப்படுத்துவதன் மூலம், நமது வழக்கமான அனுமானங்களிலிருந்து நாம் விடுபடுகிறோம். மலேசியாவின் எதிர்காலத்திற்கான கற்பனைகள் மற்றும் சாத்தியக்கூறுகளைத் தழுவுவதற்கு முன்னோக்கி செல்லும் பாதைகளை நாம் கற்பனை செய்யலாம். இந்த திட்டத்தின் நோக்கம் உங்களுக்கு ஏற்புடையதாக இருப்பின், ஒத்துழைப்பு மற்றும் உரையாடல்கள் மூலம் இந்த திட்டத்தை வளு படுத்தவும் ஆதரிக்கவும் நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
ஒரு இலாப நோக்கற்ற முயற்சி என்பதினால், இந்த இணையதளம் மற்றும் திட்டத்தை, மேம்படுத்தவும், இணையதள திருத்தங்கள் உள்ளிட்டவற்றிக்கு நிதி ஆதரவாளர்களை வரவேற்கிறோம்.
பதிப்புரிமை
கலைப்படைப்புகள் மற்றும் உரைகளின் பதிப்புரிமை அவற்றின் உரிமையாளர்களிடம் உள்ளது. இந்த வலைத்தளத்திலிருந்து ஏதேனும் படங்கள் அல்லது தகவல்களைப் பயன்படுத்த தயவுசெய்து புராஜெக்ட் ஃபியூச்சர் மலேசியா மற்றும் அந்தந்த படைப்புகளின் உரிமையாளர்களை அணுகவும்.