M KUMERAINTHIREN SIVAM
ஜோதி (Jothi)

உலகம் உறங்கும் நேரம் இது.
“நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்திருக்கணும்” என்று முணுமுணுத்துக் கொண்டே அலாரத்தை சரியாக 4. 45 மணிக்கு வைத்தாள் ஜோதி. களங்கமில்லா சிந்தனையும், நாள் முழுக்க ஓடியாடி திரிந்த களைப்பும் ஜோதியை ஆழ்நிலைத் தூக்கத்திற்கு இட்டுச் சென்றது.
இன்று கார்த்திகை மாத பௌர்ணமி, தமிழ்ச் சமய மரபினோர், குடும்பத்தோடு வழிபாடு செய்து, இல்லங்களில் விளக்குகளை வரிசையாக ஏற்றி, கொண்டாடி மகிழும் கார்த்திகைத் திருநாள். தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை என்ற ஊரில் திருக்கார்த்திகை மிக சிறப்பாக கொண்டாடப்படும். அந்த ஊரில் உள்ள பழமையான சிவன் கோயிலில், இறைவன் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக, உமை ஒரு பாகனாக, அதாவது வலது பக்கம் சிவனாகவும் இடதுபக்கம் சக்தியாகவும் தோன்றி, மறைந்து பின் ஜோதி வடிவமாக உயிர்களுக்கு அருள் புரியும் பெருநாளாக கொண்டாடப்படுகின்றது. இறைவன் ஆணும் இன்றி பெண்ணும் இன்றி, வடிவம் இருந்தும் இல்லாமலும், இருக்க வல்லவன் என்ற உன்னத தத்துவத்தை உணர்த்தும் திருநாள்.
ஜோதி கடவுள் மீது நம்பிக்கை உடையவள்; அதைவிட கடவுள் படைப்பின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதில் உறுதியானவள். சமய கிரியைகளைச் சற்று தள்ளி இருந்தே ரசிப்பவள். அதன் மறைபொருளை உள் உணர்ந்து, பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்துவாள்.
திருக்கார்த்திகை திருநாளை, ஜோதி வருடந்தோறும் மிகவும் ஈடுபாடுடன் அனுசரித்து வந்தாள். ‘ஆயிரம் மின்விளக்குகள் இருந்தாலும், அதைக் கொண்டு மற்றொரு மின் விளக்கை ஏற்ற முடியாது. ஆனால் ஒரு தீபத்தைக் கொண்டு, ஆயிரம் தீபங்களை ஏற்றலாம்’ என்று ஜோதி அடிக்கடி சொல்வாள். தன் பிரகாசம் குறையாமல் மற்ற தீபங்களையும் பிரகாசிக்க வைக்கும் தீபம் போல, ஒவ்வொருவரும் வாழ வேண்டும், தேவைப்பட்டால் உருமாறி சுட்டெரிக்கும் துணிச்சலும் வேண்டும் என்பதே இவளின் கொள்கை.
என்ன என்று தெரியவில்லை இந்த வருடம், திடீரென்று நெருங்கிய சொந்தங்களும் நண்பர்களும் தன் வீட்டில் குழுமி உள்ளனர். பல நாட்களுக்கு பிறகு எல்லோரையும் ஒரே இடத்தில் காண்பதில் ஜோதிக்கு ஒர் உற்சாகம் கலந்த மகிழ்ச்சி. ஆனால் யாரிடமும் நின்று பேச முடியவில்லை, தொடர்ந்து உற்றார் சுற்றார் எல்லாம் வந்த வண்ணமாக இருக்கின்றனர்.
சூரியன் அஸ்தமனம் ஆவதைக் கண்டாள் ஜோதி. உடனடியாக, ஒரு தீபத்தை ஏந்திக்கொண்டு வாசலுக்கு வந்தவளுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.
வீட்டு வாசல், வளாகம், மதில் இப்படி எல்லா இடங்களிலும் வசந்தகால மலர்களைப் போல தீபங்கள் பூத்துக் குலுங்குகின்றன.
“ஆஹா, எத்தனை அழகு, இது யார் செய்த வேலை !? ”
வீட்டில் குழுமி உள்ளவர்களோ மௌனமாக இருக்கின்றனர். யாரையோ தேடிக்கொண்டு அவள் வீட்டின் உள்ளே போகிறாள், தன் வீட்டில் நடுக்கூடத்தில் உள்ள சோழ வெண்கல அர்த்தநாரீஸ்வரர் சிலையை தரிசிக்கிறாள்.
ஜோதியின் கைபேசியில் ஓசை எழுகின்றது, திடுக்கிட்டு எழுகிறார்.
காலை மணி 4 45.
தன் படுக்கைக்கு அருகே வைத்திருந்த டைரியை எடுத்து இந்தக் கனவைக் குறித்து வைத்துவிட்டு, அன்றாட வேலைகளை தொடங்கினாள்.
சுமார் ஏழரை மணிக்கெல்லாம் வேலையை முடித்துவிட்டு பூஜை அறைக்குள் நுழைகிறாள். தீபத்தை ஏற்றி வைத்து, தோட்டத்திலிருந்து பறித்த செம்பருத்தி மற்றும் நந்தியாவட்டை பூக்களை பகுச்சரா மாதாவிற்கு சமர்ப்பித்தாள். சக்தியின் அம்சமான பகுச்சரா மாதா, திருநங்கை சமூகத்தின் பாதுகாவலராகக் கருதப்படுபவர்.
சீரகமும் சிறிதளவு பனங்கற்கண்டும் கொண்ட வெண்ணீர் கோப்பை ஒரு கையில், அவளுடைய செல்லக் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் நிறைந்த கட்டப்பை ஒருகையில்; காலைக்கதிர் ஒளியோடு கலந்து வரும் மலை அடிவார தூய்மையான காற்றை ரசித்துக்கொண்டே தன் வீட்டு வளாகத்தில் இருக்கும் ஆலமரத்தை நோக்கி மெல்லமாக நடந்து வருகிறாள்.
ஆலமரத்தடியில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தவுடன் தன் செல்ல குழந்தைகளெல்லாம் காலை சிற்றுண்டிக்கு தயாராகி விட்டனர். ஒவ்வொரு நாளும் சரியாக காலை 8 மணிக்கு, இதுதான் ஜோதிக்கு முக்கியமான கடன். அந்த ஆலமரத்தில் குடி கொண்டிருக்கும் கிளிகள், புறாக்கள், அணில்கள், குரங்குகள் என்று ஒவ்வொன்றாய் அணிவகுப்பாக காத்திருக்கின்றன.
முதல் பந்தி முடிவுறும் தருவாயில் அடுத்தடுத்த பந்திக்கு தயாராக வருகின்றன அந்த வனப்பகுதியில் வசிக்கும் மான்களும் மயில்களும்.
“சரி, எல்லாரும் வயிறு நிறைய சாப்பிட்டாச்சா? இப்போ நான் பசியாற போறேன்” என்று தன் செல்வங்களிடம் பேசிக் கொண்டே காலை நீட்டி அமர்ந்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த தன் தோட்டத்தில் விளைந்த தேங்காயை அசை போட்டாள்.
ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்ந்தாள் ஜோதி. அவளுக்கு தன் வீட்டிலேயே மிகவும் பிடித்தமான இடம் அந்த ஆலமரத்தடி. சிறுவயதிலிருந்து இந்த மரத்தைப் பார்த்து வளர்ந்த அவளுக்கு அந்த வீடும் மரமும் எப்போதும் சலியாத சுகத்தை தரும்.
உலகெங்கும் சுற்றித் திரிந்தாலும் இந்த வீட்டிலேயே அடைக்கலம் அடைவாள். ஜோதியும் அவள் கணவரும் தம்பதியாக தத்து எடுத்துக் கொண்ட ஆறு குழந்தைகளும் இந்த வீட்டில் தான் ஓர் அழகிய குடும்பமாக வாழ்ந்தார்கள்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆல மரத்தை கருவூலமாக கொண்டு Vriksham Foundation என்ற சமூக நல அமைப்பை தோற்றுவித்தாள் ஜோதி. அந்த அமைப்பு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பாலியல் சிறுபான்மையினர், அகதிகள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற சமூக அநீதிகளை எதிர் நோக்கும் மக்களுக்கு, ஆதரவும் அவர்களின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பாக இருந்தது.
Vriksham Foundation ஜோதியின் தலைச்சன் குழந்தை; 15 வருடத்திற்கு அவள் உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அவ்வியக்கத்தை வலுப்படுத்தினாள். தலைவராக இருந்து நன்கு வழிநடத்தினாள்; பின்பு அடுத்தடுத்த தலைவர்களை உருவாக்கி, தொடர்ந்து வரும் தலைமுறையினர் வழிநடத்தவும் வழிவிட்டாள். இயக்கமும் இயக்கத்தை சேர்ந்தவர்களும் ஒருசேர வளரவேண்டும் என்பதற்காக சார்பற்ற நிலையிலேயே செயல்பட்டாள்.
இன்று, Vriksham Foundation பல ஆயிரம் குடும்பங்களுக்கு நற்பணிகளைச் செய்து தேசிய அளவில் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு இயக்கமாக உயர்ந்து நிற்கின்றது. இந்த மாக்கோலத்திற்கு புள்ளியிட்டவள் ஜோதி. சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற Vriksham Foundation-இன் 50ஆம் ஆண்டு பொன்விழாவில் ஜோதிக்கு பிரதமர் கையால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதே நிகழ்ச்சியில் Biography of Yang Berbahagia Tun Dr. Jothi Annamalai என்ற ஜோதியின் சுயசரிதைப் புத்தகம் வெளியீடு கண்டது.
ஆத்தா!!! ஜோதியின் பேரக் குழந்தைகளின் கூக்குரல் மகிழுந்து சன்னல் வழிகளாக பாய்ந்து வந்து அந்த காலை நேர அமைதியை உடைத்தது. எப்பொழுதும் போல வார இறுதியில் ஜோதியின் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் இங்கு வந்து பொழுதைக் கழிப்பார்கள். இனி ஒவ்வொரு குடும்பமாக வந்துவிடுவார்கள்.
கணவரின் மறைவுக்குப் பின்னால் ஜோதியின் குழந்தைகள், தங்களோடு வந்து தங்கும்படி வற்புறுத்திய போதும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை.
‘இந்த உடம்புல தெம்பு இருக்கிறவரைக்கும் சொந்த காலில் நிற்பேன், யாருக்கும் சுமையாய் இருக்க மாட்டேன், எப்போ என்னால முடியலயோ அப்போ உங்களோட வந்துறேன்’ என்று அன்பாக எல்லோருடைய வேண்டுகோளையும் தட்டிக் கழித்தாள். ஜோதியின் பிள்ளைகளும் அவர்கள் துணைவர்களும், பேரக்குழந்தைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து சேர்ந்தனர். எப்போதும் போல் இல்லாமல் இன்று யாவரும் வந்திருந்தனர்.
இன்றைக்கு மதிய விருந்தும் அருமையாக அமைந்தது.
மகிழ்ச்சியான தருணங்கள் விரைவாக கடந்துவிடும் என்பது Albert Einstein சொன்னது.
‘சரி சரி, பேசிக்கொண்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல. பொழுது சாயும் வேளை வந்துருச்சு, நா போய் குளிச்சுட்டு கார்த்திகைக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்றேன்’.
தனக்குப் பிடித்தமான நூல் சேலையையும் நெற்றியில் குங்குமமும் அணிந்துகொண்டு, எப்போதும் போல எளிமையில் அழகாக தயாராகிவிட்டாள்..
குடும்பமாக சேர்ந்து வழிபாடு செய்த பின்பு விளக்குகளை ஏற்ற தொடங்கினார்கள். ஜோதி ஒரு தீபத்தை ஏந்திக்கொண்டு வீட்டின் வெளியே வருகிறாள், அவள் கண்டதோ சூரிய அஸ்தமனம்.
எங்கும் நிற்காமல் ஆலமரத்தை நோக்கி சென்று, அந்த தீபத்தை அங்கே வைத்துவிட்டு, “இந்த அழகான இயற்கையை ரசித்துக்கொண்டே ஓய்வெடுக்க போறேன்”. என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, அங்குள்ள நாற்காலியில் சாய்ந்து உட்காருகிறாள். தன்னையறியாமலேயே கண்கள் ஒரு விதமாய் சொக்கி, துயில் கொள்கிறாள். அவள் கொண்டதோ நீங்கா துயில்.
‘அம்மா!!! ஆத்தா மயக்கப்பட்டு இருக்காங்க’ ஜோதியின் கடைக்குட்டிப் பேரன் அலற எல்லோரும் பதறி வெளியே வந்தனர்.
ஜோதியின் ஊன் உயிர் வேறானதை அறிந்து, செய்ய வேண்டியதை நிதானமாகவும் பொறுமையாகவும் செய்யத் தொடங்கினார்கள்.
சேதி வெகு விரைவாக நாடெங்கும் பரவியது. தேசிய வானொலி தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஜோதியின் மறைவு தலைப்புச் செய்தியாக வலம் வந்தது. அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும், அவர்தம் ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தினார்கள்.
மாண்புமிகு முன்னாள் குடும்பம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரின் மறைவுக்கு மலேசியப் பிரதமர் தனது அதிகாரப்பூர்வ இரங்கலைத் தெரிவித்தார். தேசிய அளவிலான ஜோதியின் பங்களிப்பை நினைவுக் கூர்ந்த அவர், ஒதுக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படக்கூடிய சமூகத்தைப் பாதுகாப்பதற்காக, ஜோதியின் தலைமைத்துவத்தில் நடைபெற்றச் சட்ட சீர்திருத்தங்களைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
வீட்டில் கூட்டம் கூடத் தொடங்கியது. ஜோதியின் தூல உடல் அவள் வீட்டுக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. உறங்குவது போலும் சாக்காடு என்பதற்கிணங்க அவள் உறங்குவது போல காட்சியளித்தாள். பலவகை மதத்தினரும் அவர்களுடைய புனித நூல்களை மென்மையாக வாசித்தும் வழிபாடுகளை செய்த வண்ணம் இருந்தனர்.
வந்தவர்கள் அனைவரும் அந்த ஆலமரத்தின் அடியில் தீபத்தை ஏற்றி வைத்தனர். சிறிது நேரத்தில் ஜோதியின் வீட்டு வளாகமே ஒளிமயமாக தோன்றியது. பௌர்ணமி நிலா ஒளியுடன் கூடிய தீபங்களோடு அங்கே கூடியுள்ள மக்களும் ஏதோ ஒரு திருவிழா போன்று காணப்பட்டது.
இரவு முழுவதும், ஏற்றிவைத்த தீபங்கள் அணையாமல் பலரும் பாதுகாத்தனர். நெருங்கிய சுற்றத்தார்கள் அங்கேயே தங்கி இருக்க மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். பொழுது விடிந்தது ஜோதியின் உடலை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தார்கள்.
ஜோதிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு வந்தவர்கள் போலும் அவளின் செல்ல குழந்தைகளான கிளிகள் புறாக்கள் அணில்கள் குரங்குகள் மற்றும் மான்களும் மயில்களும் வீட்டு வளாகத்தில் கூடின.
கோயிலின் கருவறையில் இருப்பது போல மிகவும் சாந்தமான சூழல் நிலவியது. இறுதிச் சடங்குகள் தொடங்கின. ஜோதியின் விருப்பப்படி இறுதிச்சடங்குகள் மிகவும் எளிமையாக நெருங்கியவர்கள் மத்தியில் நடைபெற்றது. என்றும் போல் இன்றும் நெற்றி நிறைய தாழம்பூ குங்குமமும் நூல் சேலையையும் அணிந்துகொண்டு இந்த பூவுலக வாழ்க்கையை நிறைவு செய்யப் புறப்படுகிறாள் ஜோதி. அக்கினி காரியம் செய்து, பந்தக் கயிறு அறுக்கப்பட்டது. இருள் சூழ்ந்த அந்த தனி வழிப் பயணத்திற்குத் துணையாக ஜோதியின் பதினோரு பேரக்குழந்தைகளும் நெய்ப்பந்தம் ஏந்தினார்கள். சங்கொலி முழங்கியது.
கண்களில் நீரும் இதயத்தில் துயரும் நிரம்ப ஜோதியின் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகிறார்கள். ‘அம்மா எங்களை விட்டுச் செல்லாதீர்கள்’ என்று சொல்லாமல் சொல்லி அவளின் செல்ல குழந்தைகள் அமரர் ஊர்தியை சூழ்ந்து நின்றன. மண்ணுலக வாழ்க்கையை நிறைவு செய்த மூதாட்டியை விண் உலகம் வரவேற்க, இயற்கை அன்னை பூமாரி பொழிவது போல் தூவானம் மெல்லியதாய் தூவியது. அமரர் ஊர்தி மெல்லமாக அவள் வீட்டில் இருந்து புறப்பட்டது, பலரும் அந்த ஊர்தியை சற்று பின் தொடர்ந்து, பின் கலைந்துச் சென்றனர்.
ஜோதியின் உடல் தகனம் செய்யப்பட்டு தீயில் கரைந்தது, அவள் உயிரோ பெருஞ்ஜோதியில் கலந்தது. ஆணாக பிறந்து பெண்மையில் தன்னை உணர்ந்து, பலருக்கும் தன்னலமற்ற தாயாக வாழ்ந்த அவள் இன்று ஆண், பெண், அலி என்ற பேதம் நீங்கி தூய ஆன்மாவாகப் பிரியாவிடைப் பெற்றார்.
ஜோதி… ஜோதி… ஜோதி… சிவம்!
About the Work
A work of fiction in Tamil, ‘Jothi’ tells the story of a nonagenarian Tamil trans woman protagonist in a re-imagined Malaysia. ‘Jothi’, meaning light, is among the few gender-neutral names in the Tamil language. Often in practice, a suffix or prefix is added to denote a particular gender of someone named Jothi.
The story chronicles Jothi’s life by narrating the final day of her life and her peaceful departure in a funeral setting. We hear recollections about her life and years of yeoman service for the community. As a socio-political activist who had lived a contented life blessed with a loving family and good health, Jothi is looked up to as an inspiration for others and her demise leaves her family, friends and thousands of Malaysians in profound sadness.
The central theme of this story is the importance of human rights and the intersectional racial, religious and sexual identity in Malaysia. It is a rebellious outpouring to protest against the existent ugly realities of a transgender person being denied every aspect of their rights in Malaysia. The denial of opportunity for education, employment, and deprivation from decent social, cultural and religious life, including the complete ostracisation from participating in the governance of the country. Hate crimes and murders of many trans persons are shovelled and systematically silenced. It is not a secret that religious authorities and family members forcefully ‘misgender’ deceased trans persons.
Since childhood, trans persons experience systemic discrimination and various forms of violence. discrimination, harassment, ill-treatment, bullying, intimidation, physical, and verbal and sexual abuse. Without the love and support from family, trans children are often neglected by their parents, leaving them to experience traumatic incidents which deeply wounds their self-esteem. This negative impact on their mental health often disrupts character-building and remains a hindrance to accomplishing their fullest potential in life. Jothi’s life and the Malaysia she lived is the antipodal of the above.
Today, is it not shameful that we live in a society that not only determines the life but the final rites of a transgender person? After all, a dignified, peaceful life and departure is what we all imagine for ourselves, do we not?
Credits
Proofreading (Tamil)
Naavin Gunasegoran (Samrat Creations)
Priteeb R. Morgan
Proofreading (English)
Gregory Basil
Illustration
Veshalini Naidu (FB: Veshalini Naidu Art, IG: @veshanaidu)
Studio and Recording Services
M Jagathees (YT: MJ Audio Solution, IG: @mjagathees)
Acknowledgement
Community members of Queer Malaysian Indians (QMI, Twitter: @QMIMalaysia)
Elisha Kor Krishnan (Rina)
See related references for this work:
10 things about: Justice for Sisters, defenders of transgenders MalayMail
About the Creative

Kumerainthiren (he/him) is a Malaysian Tamil of Indian descent, who found his passion in human rights and humanitarian work. Kumerain strives to hold on to the values of diversity, inclusivity, equity and his core skills are in learning and development, project management and research. He is the co-founder and community organiser of the pioneer Indian Queer safe space and support network in Malaysia. On a personal note, Kumerain is a lifelong student, a tree-hugger, an aesthete and an aspiring Indian classical musician.
Get in touch via email at kumerain@gmail.com

HELP US ADVANCE THE CONVERSATION & GROW THIS PROJECT
Project Future Malaysia wants to create conditions to guide an expansive vision of the future for Malaysia. This perspective will include a deeper engagement with science, technology and the various arts of literature, philosophy, film and music. By re-imagining and manifesting better alternatives for Malaysia’s future, we are freed from our everyday assumptions about what is possible. We can then imagine pathways forward which enable us to embrace bolder visions and hopeful possibilities for Malaysia’s future. If you resonate with the vision of this project, we invite you to grow and support this project via collaborations and conversations.
As a not-for-profit venture, we welcome values-aligned funders, partners and collaborators including suggestions of programming, improvements or corrections on this website and project.
COPYRIGHT
Copyright of artworks and text remain with their copyright owners. Please reference Project Future Malaysia and the copyright owner(s) if you are using any images or information from this website.